/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்ட ரூ.7.27 கோடி ஒதுக்கீடு
/
ஸ்ரீபெரும்புதுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்ட ரூ.7.27 கோடி ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்ட ரூ.7.27 கோடி ஒதுக்கீடு
ஸ்ரீபெரும்புதுாரில் ஆர்.டி.ஓ., அலுவலகம் கட்ட ரூ.7.27 கோடி ஒதுக்கீடு
ADDED : ஏப் 24, 2025 08:41 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால் சத்திரம் பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, புதிய வாகன பதிவு, பெயர் மாற்றம், ஒட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்ட வாகன பதிவு சார்ந்த பல்வேறு பணிகள் நடக்கின்றன.
ஸ்ரீபெரும்புதுாரை சுற்றி, ஒரகடம், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ஐந்து சிப்காடில், 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதனால், இப்பகுதியை சுற்றி, குடியிருப்புகள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் அசுர வேகத்தில் அதிகரித்து உள்ளன.
இதனால், புதிய வாகன பதிவு, எப்.சி., புதிய டிரைவிங் லைசென்ஸ், புதுப்பித்தல் உள்ளிட்ட தேவைக்காக ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும், 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால், ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையில், பட்டுநுால் சத்திரத்தில் வாடகை கட்டடத்தில், இட நெருக்கடியில் ஆர்.டி.ஓ., அலுவலகம் இயங்கி வருகிறது.
இதற்கு மாத வாடகையாக 65,000 ரூபாய் செலுத்துவதுடன், வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்ய இடமில்லாமல், ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்கின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி பூதேரிபண்டை பகுதியில் உள்ள அரசு நிலம் 3 ஏக்கர் ஒதுக்கி, 2021 ல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 7.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடுக்கான அரசாணையை விரைவில் வெளியிட்டு கட்டுமான பணிகளை துவக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

