/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
91 சிற்றேரிகளை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு
/
91 சிற்றேரிகளை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு
91 சிற்றேரிகளை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு
91 சிற்றேரிகளை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் முடிவு
ADDED : அக் 10, 2024 11:51 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 91 சிற்றேரிகளை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட் டத்தில் 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், தலா, 100 ஏக்கர் பரப்பளவில் 380 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் நிரம்பும் நீரில், 15,000 ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர்பாசன வசதி பெறுகின்றன.
மாநில நிதிக்குழு
வட கிழக்கு பருவ மழைக்கு, தமிழக ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கும், ஏரிகளின் சீரமைப்புக்கு மாநில நிதிக்குழு மானியத்தில், 250 கோடி ரூபாய். மாநில அரசு நிதியாக, 250 கோடி ரூபாய் என மொத்தம், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என, சட்டசபை மானிய கோரிக்கையில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்கள், சீரமைக்கப்படவிருக்கும் சிறிய மற்றும் பெரிய ஏரிகளின் விபரப்பட்டியலை பொறியாளர்கள்வாயிலாக சேகரித்துவருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம்மாவட்டத்தில், 91 சிற்றேரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. குறிப்பாக,தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களின் பங்களிப்பு மானியம், மாநில நிதி, மாநில நிதிக்குழு மானியத்தில் செய்யலாம்.
மேலும், தேவை இருப்பின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஏரி மதகு சீரமைப்பு பணிகள் செய்யலாம்.
இதன் வாயிலாக,பேரிடர் காலங்களில் உபரி நீரை சேகரித்து நீர் பாசனம் மற்றும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும்.
ஆய்வு
இந்த திட்டத்தில், குடிமராமத்து பணிகள் செய்த ஏரிகளை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என, வழி காட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை கண்காணிக்க, கலெக்டர் தலைவராகவும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செயலராகவும், நிர்வாகப் பொறியாளர்,வேளாண் இணை இயக்குனர், நீர் வள ஆதாரத் துறை நிர்வாகப் பொறியாளர், ஊரக வளர்ச்சி உதவிப் பொறியாளர் என, ஆறு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்படஉள்ளன.
இதுதவிர, சிறு ஏரிகளில் நீர் பாசனம் பெறும் விவசாயிகளை நிர்வாகிகளாக தேர்வு செய்யலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக, பொலிவு இழந்து காணப்படும் ஏரிகளின் கரைகள் மற்றும் ஏரிகள் புதுப்பொலிவு ஏற்படும் என, சிறு, குறு விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேரிடர் காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பிரதான கால்வாய்கள் மற்றும் சிற்றேரிகளில் தண்ணீர் சேகரிக்கப்படும். இதேபோல, தண்ணீரை சேகரிக்கும் பட்சத்தில், ஏரிக்கரை மற்றும் மதகுகள் சீரமைக்க 91சிற்றேரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஏரிகள் வேறு ஏதேனும் திட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில், நிதி ஒதுக்கீடு பெற்று,சீரமைப்பு பணிகள்துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.