/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வரின் மறு கட்டுமான வீடுகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுக்க முடிவு
/
முதல்வரின் மறு கட்டுமான வீடுகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுக்க முடிவு
முதல்வரின் மறு கட்டுமான வீடுகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுக்க முடிவு
முதல்வரின் மறு கட்டுமான வீடுகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுக்க முடிவு
ADDED : ஏப் 08, 2025 12:57 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், பிரதமர் குடியிருப்பு, கலைஞர் கனவு இல்லம், ஆதிவாசி மற்றும் பழங்குடியினத்தவர்கள் வீடு வழங்கும் அரசு வீடு வழங்கும் திட்டங்கள் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில், முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பணிக்கு, நடப்பு, 2025- -- 26ம் நிதி ஆண்டு கணக்கெடுக்கும் பணியை துவக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில், 2000- - 01ம் நிதி ஆண்டிற்கு முன்பு கட்டிய சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்க உள்ளனர்.
ஊராட்சி தலைவர், உதவிப்பொறியாளர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி பணி மேற்பார்வையாளர், வார்டு உறுப்பினர், ஊராட்சி செயலர் ஆகிய ஐந்து நபர்கள் அடங்கிய குழுவினர் கணக்கெடுக்க உள்ளனர்.
இந்த திட்டத்தில், 2.40 லட்ச ரூபாய் செலவில், 210 சதுர அடியில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து,காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திற்கு, ஏற்கனவே அரசு திட்டத்தில் கட்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் குடியிருப்புகளுக்கு இந்த திட்டத்தில் தேர்வு செய்து புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
இதற்கு ஓரிரு வாரங்களில் கணக்கெடுத்து பட்டியலை இறுதி செய்து, பணி ஆணை வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.