/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊதிய உயர்வு அளித்தும் பயனில்லை ஊரக வளர்ச்சி துறையினர் புலம்பல்
/
ஊதிய உயர்வு அளித்தும் பயனில்லை ஊரக வளர்ச்சி துறையினர் புலம்பல்
ஊதிய உயர்வு அளித்தும் பயனில்லை ஊரக வளர்ச்சி துறையினர் புலம்பல்
ஊதிய உயர்வு அளித்தும் பயனில்லை ஊரக வளர்ச்சி துறையினர் புலம்பல்
ADDED : டிச 12, 2024 08:46 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், காவல், இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களில், 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஜீப் ஓட்டுனர்கள், தட்டச்சர், கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட 88 வகையான பணி இடங்கள் உள்ளன.
இது போன்ற பணியிடங்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதல்படி, அந்தந்த துறை சார்ந்த கண்காணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் வாயிலாக, 49 ரூபாய் முதல், 677 ரூபாய் வரையில் தினக்கூலி நிர்ணயம் செய்து வழங்கப்படுகின்றன.
இந்த தினக்கூலியை ஆண்டுதோறும், குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும் என, அரசானை உள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி, துறை சார்ந்த உயரதிகாரிகள் தினக்கூலியை உயர்த்தி வழங்கி வருகின்றனர்.
இதில், பல்வேறு துறை அலுவலக உதவியாளர், துப்புரவு தொழிலாளர்கள், ஜீப் ஓட்டுனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊதிய உயர்வு, அந்தந்த துறை சார்ந்த உயரதிகாரிகள் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதாகவும். ஒரு சில துறைகளில் குறைந்த ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, துப்புரவு பணியாளர்களுக்கு தினசரி, 436 ரூபாய் கூலி என, 13,080 ரூபாய் வழங்கி வந்தனர். அதே பணியாளர்களுக்கு, நடப்பு நிதி ஆண்டு முதல், 462 ரூபாய் புதிய உயர்வு ஊதியம் வழங்குதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய ஊதிய உயர்வு படி, 13,860 ரூபாய் வழங்க வேண்டும். இருப்பினும், ஊரக வளர்ச்சி துறையினர், ஒரு குறிப்பிட்ட தொகையை தொகுப்பு ஊதியமாக வழங்கி வருகின்றனர்.
இது, கடந்த மாதம் பெற்ற ஊதியத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. புதிய ஊதிய உயர்வு அளிக்கப்பட்டாலும், தொகுப்பூதியம் என்ற பெயரில் ஊதியம் குறைக்கப்பட்டு இருப்பது பணியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலையில் தான் கணினி உதவியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கும் என, துறை வட்டாரத்தில் புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு விடுப்பு நாட்கள், வார விடுமுறை தினங்கள் என, கழித்து தான் புதிய ஊதியம் வழங்க வேண்டும். இதுபோல செய்தால், பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்க வேண்டி இருக்கும். இது, பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என, நினைத்து தான் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.