ADDED : டிச 10, 2024 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் : சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நெல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரன், 59. சாலவாக்கத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 20ம் தேதி மதியம் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சாலவாக்கம் மசூதி அருகே சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் உயிரிழந்தார். சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.