/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மைதானத்தில் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
பள்ளி மைதானத்தில் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
பள்ளி மைதானத்தில் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
பள்ளி மைதானத்தில் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : மார் 18, 2024 03:27 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை காந்தி மைதானத்தில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சமகர சிஷ்யான், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலக வளாகத்தை ஒட்டி, கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய கழிவுநீர் 'ரிடர்ன்' ஆகி, பள்ளி விளையாட்டு மைதானத்தில், குட்டை போல தேங்கியுள்ளது.
இதில், கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றியுள்ள பகுதியினருக்கு கொசுக்களால் பல்வேறு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயை முழுமையாக துார்வாரி, பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை முழுமையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

