/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடுக்குமாடி வீட்டு கழிவுநீரால் குன்றத்துாரில் சுகாதார சீர்கேடு
/
அடுக்குமாடி வீட்டு கழிவுநீரால் குன்றத்துாரில் சுகாதார சீர்கேடு
அடுக்குமாடி வீட்டு கழிவுநீரால் குன்றத்துாரில் சுகாதார சீர்கேடு
அடுக்குமாடி வீட்டு கழிவுநீரால் குன்றத்துாரில் சுகாதார சீர்கேடு
ADDED : மார் 15, 2024 12:19 AM
குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சியில், 'டெம்பில் வேவ்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இந்த குடியிருப்பில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீரை சுத்திகரித்து அவற்றைபூங்காவில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஆனால், இந்த குடியிருப்பின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கால்வாய் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.
அருகே உள்ள காலி நிலத்தில் குட்டை போல் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் மாசடைக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க, குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.