/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சப்போட்டா பழம் வரத்து அதிகரிப்பு காஞ்சியில் 3 கிலோ ரூ.100க்கு விற்பனை

ADDED : ஏப் 19, 2025 12:30 AM

காஞ்சிபுரம்:தமிழகத்தில், திருப்பத்துார், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்ளிலும், ஆந்திர மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் சப்போட்டா பழம், காஞ்சிபுரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இரு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரத்தில் கிலோ சப்போட்டா 80 - -100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது . இந்நிலையில், திருப்பத்துார் மாவட்டத்தில், சப்போட்டா சீசன் துவங்கி விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் 3 கிலோ சப்போட்டா பழம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்கள் கிலோ கணக்கில் சப்போட்டா பழத்தை வாங்கி செல்கின்றனர்.