/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்துக்குடி விலை சரிவு 4 கிலோ ரூ.100க்கு விற்பனை
/
சாத்துக்குடி விலை சரிவு 4 கிலோ ரூ.100க்கு விற்பனை
ADDED : ஆக 04, 2025 11:37 PM

காஞ்சிபுரம்,ஆந்திர மாநிலத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் 4 கிலோ சாத்துக்குடி பழம், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில், சாத்துக்குடி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாத்துக்குடி வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள ப ழக்கடைகளில் தரத்திற்கு ஏற்ப கிலோ சாத்துக்குடி 50 - 80 ரூபாய்க்கும், நடமாடும் வாகனங்களில் 4 கிலோ சாத்துக்குடி பழம், 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால், ஏரா ளமானோர் பழங்களை வாங்கி சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'இடைத்தரகர்கள் இன்றி, ஆந்திர விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குவதா ல், சாத்துக்குடி பழங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது என்றனர்.