/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வண்டலுாரில் அதிகரிக்கும் திடீர் விளம்பர பலகைகள்
/
வண்டலுாரில் அதிகரிக்கும் திடீர் விளம்பர பலகைகள்
ADDED : அக் 01, 2024 06:44 AM

வண்டலுார் : வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகின்றன.
இதை தொடர்ந்து, விளம்பர பலகைகள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் அதிகரித்து வருகின்றன.
வண்டலுாரில், ஜி.எஸ்.டி., மற்றும் வாலாஜாபாத் சாலைகளில், ராட்சத விளம்பர பலகைகள் அதிகம் உள்ளன.
தாம்பரம் இரும்புலியூரிலும், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, விளம்பர பலகைகள் காணப்படுகின்றன.
வண்டலுாரில், தனியார் கட்டடங்கள் மீது, ராட்சத இரும்பு சாரத்தில் விளம்பர பலகைகள் அதிகம் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் மாறி, விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது.
எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வண்டலுாரில் அதிகரித்தும் வரும் ராட்சத விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.