/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம், சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் சமர்ப்பித்து விழா
/
பழையசீவரம், சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் சமர்ப்பித்து விழா
பழையசீவரம், சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் சமர்ப்பித்து விழா
பழையசீவரம், சீரடி சாய்பாபாவிற்கு செங்கோல் சமர்ப்பித்து விழா
ADDED : ஆக 31, 2024 01:07 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் சீரடி சாய்பாபா (சாய்நாத் மகராஜ்) கோவில் உள்ளது. இக்கோவிலில், சாய்பாபாவிற்கு செங்கோல் சிம்மாசனம் பட்டாபிஷேகம் செய்ய பக்தர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு அப்பகுதி விநாயகர் கோவிலில், 3 அடி உயரம் கொண்ட செங்கோல் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து, மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக செங்கோலை எடுத்து வந்து, சாய்பாபா கோவிலில் சமர்ப்பணம் செய்தனர்.
அப்போது, செங்கோல் சிம்மாசனம் பட்டாபிஷேகம் விழா நடந்தது.
மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, புஷ்பாஞ்சலி, மங்கள ஆர்த்தி நிகழ்ச்சியும், அதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பழையசீவரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.