/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி கட்டடம் கட்டும் பணி ரூ.3.29 கோடியில் துவக்கம்
/
பள்ளி கட்டடம் கட்டும் பணி ரூ.3.29 கோடியில் துவக்கம்
பள்ளி கட்டடம் கட்டும் பணி ரூ.3.29 கோடியில் துவக்கம்
பள்ளி கட்டடம் கட்டும் பணி ரூ.3.29 கோடியில் துவக்கம்
ADDED : பிப் 06, 2025 09:56 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 2000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இங்கு, போதிய கட்டட வசதி இல்லாமல் இருந்ததால், புதிதாக கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2024 -- - 25 நிதி ஆண்டில், நபார்டு திட்டத்தின் கீழ், 3.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 14 வகுப்பறைகள் கொண்ட, புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணியின், துவக்க நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் மங்கள கௌரி தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர், புதிய வகுப்பறை கட்டட கட்டுமான பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பெருநகரில் இருந்து மாங்கல் கூட்ரோடு, காஞ்சிபுரம் வழியாக பூந்தமல்லி வரை செல்லும், தடம் எண் 576 என்ற புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுந்தரம், ஓரிக்கை போக்குவரத்து பணிமனை மேலாளர் வினோத் மற்றும் பலர் பங்கேற்றனர்.