/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
20 ஆண்டுகளுக்கு பின் காவூரில் மீண்டும் பள்ளி துவக்கம்
/
20 ஆண்டுகளுக்கு பின் காவூரில் மீண்டும் பள்ளி துவக்கம்
20 ஆண்டுகளுக்கு பின் காவூரில் மீண்டும் பள்ளி துவக்கம்
20 ஆண்டுகளுக்கு பின் காவூரில் மீண்டும் பள்ளி துவக்கம்
ADDED : டிச 03, 2025 06:57 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், காவூர் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வசேவா தொண்டு நிறுவனம் சார்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கியது.கடந்த 2004ல், அப்பள்ளி கைவிடப்பட்டது.
அதை தொடர்ந்து, அப்பகுதி குழந்தைகள் காவிதண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் மாம்பாக்கம் தனியார் மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில துவங்கினர்.
இதனால், காவூரில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வித் துறை நடவடிக்கையின் பேரில், காவூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மீண்டும் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
அதே கட்டடம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
அப்பகுதி ஊராட்சி தலைவர் இந்திரா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், பள்ளியை துவக்கி வைத்தார்.

