/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 24, 2024 09:54 PM
காஞ்சிபுரம்:மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலைமாற்ற அமைச்சகம், தமிழக அரசின், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தேசிய பசுமைப்படை சார்பில், பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, பிப்., 2ல் உலக ஈர தினம் கொண்டாடப்பட உள்ளது.
நடப்பு ஆண்டு உலக ஈர தினத்தின் கருப்பொருள், 'ஈர நிலம் மற்றும் மனித நல்வாழ்வு' என்பதாகும். எனவே, ஈர நிலங்கள் உலகின் அதிக உற்பத்தித் திறன் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பாக கருதப்படுகின்றன.
ஈர நிலத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று பள்ளிகளில் மாணவர்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மனிதச் சங்கிலி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் அரசு உயர்நிலைப்பள்ளி, அந்திரசன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்கள் ஜெயந்தி, குளோரி, குணசேகரன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வில்லியம் விஜயராஜ் மற்றும் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் செண்பகசவரி பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.