/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி வாகனங்கள் சோதனை 16 பஸ்களுக்கு அனுமதி ரத்து
/
பள்ளி வாகனங்கள் சோதனை 16 பஸ்களுக்கு அனுமதி ரத்து
ADDED : மே 04, 2025 01:03 AM

காஞ்சிபுரம்:வடமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகஎல்லைக்குட்பட்ட 24 தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி வாகனங்களை, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் மிருணாளினி, 176 பள்ளி வாகனங்களை சோதனை செய்தார்.
இதில், 160 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது. 16 வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து ஏழு தினங்களுக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்று பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
மேலும், கல்லுாரிவளாகத்தில் ஓட்டுநர் களுக்கு, '108' ஆம்புலன்ஸ்ஊழியர்கள் முதலுதவி பயிற்சி, தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
இந்நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பு நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

