/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு
/
பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு
பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு
பரந்துார் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்பு
ADDED : மார் 01, 2024 11:28 PM
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்துார் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், தமிழக அரசின் 'டிட்கோ' விண்ணப்பம் செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், 5,368.93 ஏக்கரில் அமைக்க முடிவானது. அதன் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, தமிழக அரசின் 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
அந்நிறுவனம், விமான நிலையம் அமைக்க தேவையான விரிவான தொழில்நுட்பம் மற்றும் செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக முடித்துள்ளது. பரந்துார் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த வாரம் துவங்கியது.
தற்போது, விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் டிட்கோ விண்ணப்பம் செய்துள்ளது. பசுமை மின்சாரத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பரந்துார் விமான நிலையம், 2029ல், இரண்டு கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக இருக்கும்.