ADDED : பிப் 19, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம், ஏரியில் செம்மண் மற்றும் சவுடு மண் கொள்ளை நடப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகரிகளுக்கு புகார் வந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் உதவி புவியியலாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி ஜெகதீசன், நேற்று ஸ்ரீபெரும்புதுார் அருகே, கட்சிப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, உரிய நடைசீட்டு இல்லாமல், 5 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியியை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.