/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து அயோத்திக்கு பிரசாத பாக்கெட் அனுப்பி வைப்பு
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து அயோத்திக்கு பிரசாத பாக்கெட் அனுப்பி வைப்பு
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து அயோத்திக்கு பிரசாத பாக்கெட் அனுப்பி வைப்பு
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து அயோத்திக்கு பிரசாத பாக்கெட் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 01, 2025 11:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலிலிருந்து, 50,000 விபூதி பாக்கெட், 10,000 குங்கும பாக்கெட் உட்பட மொத்தம் 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அயோத்தியில் உள்ள சங்கர மடத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு கோவில் அலுவலகத்தில் நடந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேச அய்யர் கூறியது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், மார்ச் 29ம் தேதி துவங்கிய வசந்த நவராத்திரி உத்சவம், வரும் 6ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில், காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, நவ ஆவர்ண பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், அம்மனை தரிசிக்க வருபவர்கள் கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கோவிலில், 'கூலிங் பெயின்ட்' எனப்படும் வெள்ளை நிற வர்ணப்பூச்சு தரைதளத்தில் அடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பிரதட்சணம் செய்பவர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோவிலின் கிழக்கு கோபுர வாசலில் இருந்து மடப்பள்ளி வரை கூரை போடப்பட்டு இருப்பதுடன் கோடைக்காலம் என்பதால் பக்தர்களுக்கு நீர்மோர்,பானகமும் வழங்கி வருகிறோம்.
அயோத்தியில் உள்ள சங்கர மடத்தின் கிளைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 50,000 விபூதி பாக்கெட், 10,000 குங்குமம் பாக்கெட் உட்பட மொத்தம் 60,000 பாக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன், நிர்வாகி பத்ரி நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

