/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலர்கள் பழுது பார்க்கும் இடமாக மாறிய சர்வீஸ் சாலை
/
டூ - வீலர்கள் பழுது பார்க்கும் இடமாக மாறிய சர்வீஸ் சாலை
டூ - வீலர்கள் பழுது பார்க்கும் இடமாக மாறிய சர்வீஸ் சாலை
டூ - வீலர்கள் பழுது பார்க்கும் இடமாக மாறிய சர்வீஸ் சாலை
ADDED : ஜூலை 07, 2025 01:14 AM

ஸ்ரீபெரும்புதுார்,:மாத்துார் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து, டூ - வீலர்கள் பழுது பார்க்கும் நிலையம் செயல்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்த சாலை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் -வடகால் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அடுத்த மாத்துார் பகுதியில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து டூ - வீலர் பழுது பார்ப்பு நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம்அடைந்து வருகின்றனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் இடையூறாக ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.