ADDED : டிச 28, 2024 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகர் கிராமம் வழியாக வேடல், கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், ஏனாத்துார், செட்டியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமவாசிகள் சென்று வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகரில் இருந்து, காரை கிராமம் வழியாக வேடல் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

