/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளியம்பாக்கம் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
/
புளியம்பாக்கம் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
புளியம்பாக்கம் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
புளியம்பாக்கம் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
ADDED : பிப் 06, 2025 01:10 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், பெரிய காலனி படவேட்டம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
இக்கால்வாய் தண்ணீர் அப்பகுதி நிலங்கள் வழியாக வெளியேற வழிவகை ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கால்வாயின் குறிப்பிட்ட சில பகுதிகளை பட்டா நிலம் எனக்கூறி, சிலர் துார்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து கால்வாய் வாயிலாக வரும் கழிவுநீர், வெளியேற வழியின்றி, ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து, புளியம்பாக்கம் படவேட்டம்மன் கோவில் தெருவாசிகள் கூறியதாவது:
புளியம்பாக்கம் குடியிருப்பின் பல்வேறு தெருக்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பெரிய காலனி, படவேட்டம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் வகையில் வடிகால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் வரும் கழிவுநீர், ஓராண்டாக முறையாக வெளியேறாமல் திறந்தவெளியாக ஒரே இடத்தில் தேங்குகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இக்கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, புதிதாக கால்வாய் வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.