/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 7ல் இருந்து 2 அடியாக குறைந்ததால் சாலையில் ஓடும் கழிவுநீர்
/
ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 7ல் இருந்து 2 அடியாக குறைந்ததால் சாலையில் ஓடும் கழிவுநீர்
ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 7ல் இருந்து 2 அடியாக குறைந்ததால் சாலையில் ஓடும் கழிவுநீர்
ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 7ல் இருந்து 2 அடியாக குறைந்ததால் சாலையில் ஓடும் கழிவுநீர்
ADDED : டிச 12, 2025 05:53 AM

ஸ்ரீபெரும்புதுார்: கிளாய் ஊராட்சி, ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால், 7 அடியிலிருந்து, 2 அடியாக குறைந்து உள்ளதால், கால்வாயில் விடப்படும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்து வருவதால், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு மண்டலமாக மாறியுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கிளாய் ஊராட்சிக்குட்பட்ட ஆயகொளத்துார் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்கு, வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தரவில்லை.
இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர், ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாயில் விடப்பட்டு வருகிறது.
ஏழு அடி அகலம் இருந்த இந்த நீர்வரத்து கால்வாய், சமீபகாலமாக பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, கால்வாயின் அகலம் தற்போது 2 அடியாக குறைந்து உள்ளது.
இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதில் விடப்படும் கழிவுநீர் சீராக வடியாமல், சாலையில் வெளியேறி வழிந்து ஓடுகிறது. 20 நாட்களுக்கு மேலாக சாலையில் வெளியேறி வழிந்து ஓடும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் நடக்கக்கூட முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், நோய்வாய் ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். குறிப்பாக, சாலையில் வெளியேறும் கழிவுநீரின் மீது செங்கற்களை போட்டு, அதன் மீது நடந்து செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.
பள்ளிக்கு செல்லும் சிறுவர் - சிறுமியர், வயதானோர், கர்ப்பிணியர் உள்ளிட்ட அனைவரும் செங்கற்கள் மீது நடந்து செல்லும் போது, இடறி கழிவுநீரில் விழுந்து விடுவமோ என, அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, ஆயகொளத்துார் ஏரி நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வாரி சீரமைப்பதுடன், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

