/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ராஜ வீதியில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ராஜ வீதியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ராஜ வீதியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் ராஜ வீதியில் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 08, 2024 01:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் கச்சபேஸ்வரர், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி, கோதண்டராமர் பஜனை கோவில் மட்டுமின்றி, திருமண மண்டபம், மளிகை, நகை, ஸ்டேஷனரி, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகளவு நடந்து செல்லும் இச்சாலையில், குமரகோட்டம் கோவில் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
வேகமாக செல்லும் வாகனங்களால், பாதசாரிகளின் மீது கழிவுநீர் தெளிப்பதால் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், மேற்கு ராஜ வீதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.