/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழியும் கழிவுநீர் கோவில் தெருவில் சசீர்கேடு
/
சாலையில் வழியும் கழிவுநீர் கோவில் தெருவில் சசீர்கேடு
சாலையில் வழியும் கழிவுநீர் கோவில் தெருவில் சசீர்கேடு
சாலையில் வழியும் கழிவுநீர் கோவில் தெருவில் சசீர்கேடு
ADDED : டிச 20, 2024 01:06 AM

காஞ்சிபுரம்:பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் சன்னிதி தெரு வழியாக பொய்யாகுளம், வரதராஜபுரம், உப்புளம், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு மாதங்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, இவ்வழியாக செல்லும் பாதசாரிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
மாத கணக்கில் வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.