/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழியும் கழிவுநீர் ஸ்ரீபெரும்புதுாரில் சீர்கேடு
/
சாலையில் வழியும் கழிவுநீர் ஸ்ரீபெரும்புதுாரில் சீர்கேடு
சாலையில் வழியும் கழிவுநீர் ஸ்ரீபெரும்புதுாரில் சீர்கேடு
சாலையில் வழியும் கழிவுநீர் ஸ்ரீபெரும்புதுாரில் சீர்கேடு
ADDED : அக் 19, 2024 11:27 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, சரோஜினி நகர், விக்னேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் விக்னேன் நகர் பிரதான சாலையை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகள் உள்ள இந்த சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கு மேலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால், இப்பகுதிவாசிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவ்வழியா நடந்து செல்லும் வயதானோர்,பெண்கள், குழந்தைகள் நோய்தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மேலும், சாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, விக்னேஷ் நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க, ஸ்ரீபெரும்புதார் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.