/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் அடைப்பால் சாலைக்கு வரும் கழிவுநீர்
/
கால்வாய் அடைப்பால் சாலைக்கு வரும் கழிவுநீர்
ADDED : செப் 23, 2025 12:26 AM

ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சி தாமரை பூ சாலையில், போந்துார் கிராமத்தின் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், ஊராட்சி அலுவலகம், பேருந்து நிறுத்தம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.
இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் முறையாக துார் வாராததால், மண் திட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்து, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும், வீட்டு உபயோக கழிவுநீர், கால்வாயில் சீராக வெளியேறாமல், சாலையில் வழிந்து வருகிறது. போந்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வடிகால்வாயை துார்வாரி பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.கார்த்திகேயன், போந்துார்.