/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் கலந்து குளம் மாசு சிக்கராயபுரத்தில் அவலம்
/
கழிவுநீர் கலந்து குளம் மாசு சிக்கராயபுரத்தில் அவலம்
கழிவுநீர் கலந்து குளம் மாசு சிக்கராயபுரத்தில் அவலம்
கழிவுநீர் கலந்து குளம் மாசு சிக்கராயபுரத்தில் அவலம்
ADDED : ஜன 23, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் : குன்றத்துார் ஒன்றியம் சிக்கராயபுரம் ஊராட்சியில் லீலாவதி நகரில் தாமரை குளம் உள்ளது.இந்த குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்தது.
காலப்போக்கில் குக்கரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது.
இந்நிலையில், குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இதனால், குளம் மாசடைந்து வருகிறது.
மேலும், இந்த குளத்தை துார் வாரி ஆழப்படுத்த வேண்டும்.
குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க வேண்டும்என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.