/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு
/
ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு
ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு
ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 14, 2024 11:35 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தாமல்வார் தெரு வழியாக கோனேரிகுப்பம், ஏனாத்துார் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இச்சாலையில், இரு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவு நீர் தெளிக்கிறது. மாத கணக்கில் கழிவு நீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைகிறது. எனவே, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.