/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 10, 2024 12:52 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை, புதிய ரயில் நிலையம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.