/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர்
ADDED : ஜூன் 03, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, எம்.ஜி.ஆர். நகர், 4வது குறுக்கு தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' மூடி வழியாக கழிவுநீர் சாலையில் வெளியேறி வழிந்து வருகின்றது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., நகர் பகுதி வழக்கத்தை விட இந்த சற்று தாழ்வாக இருப்பதால், அதற்கு ஏற்றாற் போல, பாதாள சாக்கடை குழாய் உயர்த்தி அமைக்கப்படவில்லை.
இதனால், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியே கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது.
நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது சரி செய்து செல்கின்றனர். இருந்தும் ஒருசில நாட்களிலே மீண்டும் கழிவுநீர் பிரச்னை தொடர்கிறது. 8 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.