/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 18, 2025 02:26 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீரால், வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, படப்பை, ஒரகடம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக விளங்குகிறது.
நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த சாலையில், ஒரகடம் அடுத்த, காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழைநீர் வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வண்டலுார்-- - வாலாஜாபாத் சாலையில் தேங்கி உள்ளதால், அவ்வழியாக செல்லும் பயணியர், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
எனவே, பிரதான சாலையில் கழிவுநீர் வெளியேறி தேங்குவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.