/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர்
ADDED : மே 30, 2025 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புதிய ரயில் நிலையம், பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாய் வாயிலாக வெளியேறுகிறது.
மழைநீர் செல்லும் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனால், மழைநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளும் மாசடையும் சூழல் உள்ளது.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.