/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு சாலையோரம் சீரமைப்பு பணி தீவிரம்
/
செவிலிமேடு சாலையோரம் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : மார் 17, 2024 01:47 AM

கீழம்பி:காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, வெங்கடாபுரம், கீழ்கதிர்பூர் வழியாக கீழம்பி செல்லும் புறவழிச்சாலை, 8 கி.மீ., நீளம் உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் செவிலிமேடு புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கீழம்பியில் மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.
புறவழி சாலை என்பதால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண்ணை அணைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக மண் அணைத்து, சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

