/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்
/
புதர் மண்டிய நீர்வரத்து கால்வாய்
ADDED : டிச 11, 2024 11:15 PM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் தென்னமர நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த நீர்வரத்து கால்வாய் வாயிலாக, பெருநகர் ஏரி நீரை விளைநிலங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2020 -- 21 நிதி ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், 29.44 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
தற்போது, நீர்வரத்து கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் தடையின்றி தண்ணீர் செல்லமுடியாத நிலை உள்ளது. கால்வாயை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பருவ மழை தீவிரமடைவதற்குள் கால்வாயை, சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

