sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரிகளில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட...நடவடிக்கை!:15 நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய 'நோட்டீஸ்'

/

ஏரிகளில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட...நடவடிக்கை!:15 நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய 'நோட்டீஸ்'

ஏரிகளில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட...நடவடிக்கை!:15 நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய 'நோட்டீஸ்'

ஏரிகளில் கழிவுநீர் விடும் தொழிற்சாலைகளை மூட...நடவடிக்கை!:15 நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய 'நோட்டீஸ்'


ADDED : பிப் 21, 2024 11:16 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் மாசடைந்து வருகின்றன. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் சரி செய்யாவிடில், தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாவில், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன.

இங்கு கார், பேருந்து, லாரி, ஜே.சி.பி., பைக், டயர், கண்ணாடி, போன்றவை தயாரிக்கும் 1,000த்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.

இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், மாத்துார், ஒரகடம், வெங்காடு, ஸ்ரீபெரும்புதுார், போந்துார், மாம்பாக்கம், வைப்பூர், பிள்ளைப்பாக்கம், வடக்குப்பட்டு, வல்லம், பண்ருட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகள் அதிகப்படியாக மாசடைந்து வருகின்றன.

நீர்நிலை மாசு


குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வைப்பூர் சித்தேரி மற்றும் பெரிய ஏரி உள்ளது.

ஒரகடம் சிப்காட்டின் ஒருபகுதி, வைப்பூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இங்கு, தொழிற்சாலைகள் வருகைக்கு பின், விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது.

விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தாவிட்டாலும், இந்த ஏரியின் நீர் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. தவிர, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க, ஏரிநீரை குடித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஏரியின் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரியில் கலக்க விடுகின்றனர்.

இதனால், ஏரிநீர் மாசடைந்து துர்நாற்றம்வீசுகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால் ஏரியில் உள்ள செடிகள் கருகி வருகின்றன.

இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லது பிற தேவைகளுக்காக உபயோகிக்க வேண்டும்.

இவற்றை பெரும்பாலான தொழிற்சாலைகள் கடைப்பிடிப்பதில்லை, சிறிய தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்வதில்லை. பல தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக கால்வாய்களில் விடுகின்றன.

இவை, அருகில் உள்ள ஏரி, குளம், நீர் நிலைகளில் கலந்து மாசடைந்து வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் 98 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீரை பயன்படுத்தி, இப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகின்றன.

தொழிற்சாலைளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரிகளில் கலப்பதால், நிலத்தடி நீர் பாதிப்படைவதோடு, விவசாயிகளும் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர். கழிவுநீர் கலந்த நீரில் விவசாயம் செய்யும் போது, உடல் அரிப்பு, தோல் நோய்களால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.

கால்நடைகள் பாதிப்பு


மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க, ஏரி நீரை குடித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த ஏரியின் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து மாசடைவதால், ஏரியின் நீரை அருந்தும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு வருகின்றன.

எனவே, ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், நீர் நிலைகள் மாசடைவதை தடுக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறோம். அவ்வாறு நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அதன்பின் 15 நாள்களுக்குள் சரி செய்யாத பட்சத்தில், தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச்சூழல் பொறியாளர்,

ஸ்ரீபெரும்புதுார்.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலக்கும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

- பொதுப்பணித்துறை,

நீர்வள ஆதாரம், ஸ்ரீபெரும்புதுார்.

பெரும்பாலும் ஏரிகளில் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கிறது. இதனால், இந்நீரை விவசாயத்திற்காக பயன்படுத்தும் விவசாய நிலங்களும் பாதிப்படைகின்றன. கழிவுநீர் கலந்த நீரால், தோல் நோய், உடல் அரிப்பு ஏற்படுகிறது.

- எஸ்.வெங்கடேசன்,

விவசாயி, ஸ்ரீபெரும்புதுார்.






      Dinamalar
      Follow us