/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விசைத்தறியில் பட்டு ரகங்கள் கைத்தறி சங்கம் எச்சரிக்கை
/
விசைத்தறியில் பட்டு ரகங்கள் கைத்தறி சங்கம் எச்சரிக்கை
விசைத்தறியில் பட்டு ரகங்கள் கைத்தறி சங்கம் எச்சரிக்கை
விசைத்தறியில் பட்டு ரகங்கள் கைத்தறி சங்கம் எச்சரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 07:33 PM
காஞ்சிபுரம்:விசைத்தறியில் பட்டு நெய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கைத்தறி நெசவாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம் நகருக்கு பெருமை அளிக்கும் பட்டு சேலை உற்பத்தியின் பெருமையை குளைக்கும் வகையில், கடந்த பல ஆண்டுகளாக, போலி பட்டு சேலையும், விசைத்தறி சேலை விற்பனையும் உள்ளது.
ஆண்டுக்கு பல நுாறு கோடி ரூபாய் சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இதில், மோசடி செய்து கோடிக்கணக்கில் வெளியூர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர்.
கைத்தறியில் மட்டுமே நெய்ய வேண்டிய பட்டு ரகங்களை, விசைத்தறியில் நெய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீரசிவாஜி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், கைத்தறி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், கூலி உயர்வு போன்ற கோரிக்கைகைளையும் முன்வைத்தனர்.
இந்நிலையில், விசைத்தறியில் குறிப்பிட்ட பட்டு ரகங்களை நெய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என, தங்களது போராட்டத்தை விரிவாக்க உள்ளதாக, வீரசிவாஜி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் பொதுச்செயலர் பலராமன் தெரிவித்து உள்ளார். கைத்தறி துறை அதிகாரிகள், விசைத்தறியில் பட்டு ரகங்களை நெய்வோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் எனவும் எச்சரித்துள்ளார்.