/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார்- - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
/
சார்- - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
சார்- - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
சார்- - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
ADDED : டிச 04, 2025 04:24 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாதில், பேருந்து நிலையம் அருகே சார் - பதிவாளர் அலு வலகம் இயங்குகிறது.
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்டோர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், வீட்டு மனைகள் மற்றும் நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்குமான பதிவுகள் மேற்கொள்ள தினசரி இந்த அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகம் எதிரே அரசு கருவூலம் இயங்குகிறது. கருவூலத்திற்கு தினசரி ஏராளமா னோர் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகங்கள் சார்ந்த வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் வசதியற்ற பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந் நிலையில், வாலாஜா பாத் சார் - பதிவாளர் அலுவலக கட்டடம் முன் பகுதியில் காலி இடம் உள்ளது.
அந்த இடம் பராமரிப்பு இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
மேலும், அந்த இடத்தை காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மக்கி ஆக்கிரமித்துள்ளது.
எனவே, வாலாஜாபாத் சார் - பதிவாளர் அலுவலகத்தை சூழ்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.
அந்த இடத்தில் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

