/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமாங்காடு கோவில் குளம் புதுப்பொலிவு
/
சிறுமாங்காடு கோவில் குளம் புதுப்பொலிவு
ADDED : ஜூலை 26, 2025 02:14 AM

ஸ்ரீபெரும்புதுார்:சிறுமாங்காடு ஊராட்சி யில், சீரமைக்கப் பட்ட விநாயகர் கோவில்குளம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமாங்காடு ஊராட்சியில், விநாயகர் கோவில் குளம் உள்ளது.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, ஊராட்சி பொது நிதியின் மூலம், 94.98 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை துார்வாரி, குளக்கரையை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் சிமென்ட் கல் பதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, சிறுமாங்காடு ஊராட்சி தலைவர் சுபரஞ்சனி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.