/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்வாராததால் துார்ந்த சிறுபினாயூர் ஏரி
/
துார்வாராததால் துார்ந்த சிறுபினாயூர் ஏரி
ADDED : மார் 18, 2024 03:41 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 550 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி நீர் பாசனத்தை கொண்டு, அப்பகுதியில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சிறுபினாயூர் ஏரி, பல ஆண்டுகளாக துார்வாராத நிலையில், நீர் பிடிப்பு பகுதி துார்ந்து வயல் வளர்ந்த நிலப்பகுதியாக காட்சி அளிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரிக்கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. எனினும், ஏரி நீர் பிடிப்பு பகுதி துார்வாரவில்லை.
இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தேவையான நீர்வரத்து இருந்தும் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை தொடர்ந்தது.
எனவே, சிறுபினாயூர் ஏரி துார்வாரி நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

