/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி - வேன் மோதி ஆறு பேர் காயம்
/
லாரி - வேன் மோதி ஆறு பேர் காயம்
ADDED : டிச 14, 2024 11:54 PM

காஞ்சிபுரம்:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை கூலித்தொழிலாளர்கள் நான்கு பேர், தங்கள் கை குழந்தை, ஐந்து வயது சிறுமியுடன் மினி வேனில் வேலைக்கு சென்றனர்.
வேலுாரில் இருந்து சென்னை, ரெட்ஹில்ஸ் மார்க்கமாக மினி வேன் சென்றது. நேற்று மாலை 4:30 மணியளவில், சந்தவேலுார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், அதே மார்க்கமாக சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதியது.
இதில், ஆறு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, சந்தவேலுார் அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.