sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதிய தொழில் உரிம வரி விதிப்பால் சிறு தொழில் நடத்துவோர் பாதிப்பு அதிக வருவாய் ஈட்டுவோருக்கு சலுகையால் வேதனை

/

புதிய தொழில் உரிம வரி விதிப்பால் சிறு தொழில் நடத்துவோர் பாதிப்பு அதிக வருவாய் ஈட்டுவோருக்கு சலுகையால் வேதனை

புதிய தொழில் உரிம வரி விதிப்பால் சிறு தொழில் நடத்துவோர் பாதிப்பு அதிக வருவாய் ஈட்டுவோருக்கு சலுகையால் வேதனை

புதிய தொழில் உரிம வரி விதிப்பால் சிறு தொழில் நடத்துவோர் பாதிப்பு அதிக வருவாய் ஈட்டுவோருக்கு சலுகையால் வேதனை


ADDED : மார் 31, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:புதிய தொழில் உரிம வரி விதிப்பால், சிறிய தொழில் நடத்தும் உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. அதிக வருவாய் தரும் தொழில்களுக்கு சலுகை காட்டி இருப்பது வேதனை அளிக்கிறது என, சிறு தொழில் நடத்துவோர்கள் இடையே புலம்பல் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று பேரூராட்சிகள் உள்ளன.

கடித அறிவுரை


இதில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தனி ஆணையரையும் நியமிக்கப்பட்டு உள்ளது. மீதம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய இரு பேரூராட்சிகள் மட்டுமே உள்ளன.

இந்த இரு பேரூராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருந்தாலும், ஊராட்சிகளுக்குரிய கட்டமைப்பு வசதிகள் மட்டுமே உள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின் படி மற்றும் பேரூராட்சி ஆணையர் கடித அறிவுரை படி வர்த்தகம், வியாபாரம், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு உரிமக் கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பின் படி வசூலிக்க வேண்டும் என, பேரூராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில் தொழில் உரிமக் கட்டணம் வசூலிக்க பட்டியலை அறிவித்து உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நடுத்தர தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்கள், வியாபார நிறுவனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

குறு தொழில் நிறுவனங்களுக்கு, 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை. சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 2,000 முதல் 3,500 ரூபாய் வரை. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரையிலும். பிற தொழிற்சாலைகளுக்கு, 7,500 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், தையல்பொருட்கள் உற்பத்தி செய்தல் முதல் கயலான் கடை வரையில், 50 வகையான வர்த்தகப் பொருட்களுக்கு, 750 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

பரிசீலனை


மேலும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல் கலை நயமிக்கப்பொருட்கள் சேமித்து வைத்தல் வரையில், 130 விதமான வியாபாரங்களுக்கு சதுர அடி 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

திருமண மண்டபங்கள், வாகன நிறுத்துமிடங்கள் 1,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது, அதிகம் தான் என, வியாபாரிகள் முதல் பலதரப்பட்ட மக்கள் வரையில் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி சிறிய ரக கடைக்காரர் ஒருவர் கூறியதாவது:

தினசரி பணம் புழக்கம் இருக்கும் தொழிலாக இருந்தாலும், இட வசதிக்கு ஏற்ப மூன்று விதமான கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது தொழில்களை நசுக்கும் விதமாக உள்ளது.

உதாரணமாக, முடி திருத்தும் கடைக்கு சதுர அடி எண்ணிக்கைக்கு ஏற்ப மூன்று விதமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்தும் திருமண மண்டபங்களுக்கு இரு வித கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது அதிசலுகையாக உள்ளது. இதை அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டணம் என்பது நாங்கள் நிர்ணயம் செய்யவில்லை. அரசு நிர்ணயம் செய்து அனுப்பி உள்ளது.அதை செயல்படுத்த உள்ளோம். இதில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணங்கள் விபரம்


திருமண மண்டபங்கள்அளவு கட்டணம்
சிறியது - 10,000 சதுர அடிக்குள் ரூ.2,000
பெரியது - 10,000 சதுர அடிக்குமேல் ரூ.5,000
முடிதிருத்தும் கடைகள்
300 சதுர அடி வரை ரூ.500
500 சதுர அடி வரை ரூ.1,500500க்கு மேல் ரூ.3,000








      Dinamalar
      Follow us