sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல் குவாரி, 'கிரஷர்'களில் இருந்து வெளியேறும் புகை உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் சுகாதார பாதிப்பு

/

கல் குவாரி, 'கிரஷர்'களில் இருந்து வெளியேறும் புகை உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் சுகாதார பாதிப்பு

கல் குவாரி, 'கிரஷர்'களில் இருந்து வெளியேறும் புகை உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் சுகாதார பாதிப்பு

கல் குவாரி, 'கிரஷர்'களில் இருந்து வெளியேறும் புகை உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் சுகாதார பாதிப்பு


ADDED : டிச 09, 2024 01:52 AM

Google News

ADDED : டிச 09, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் செயல்படும் கல் குவாரி மற்றும் 'கிரஷர்'களில் இருந்து பரவும் புகை, புழுதி போன்றவற்றால் பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதாகவும், பகுதிவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில், 24 தனியார் கல் குவாரிகளும், 50க்கும் மேற்பட்ட கல் அரைவை தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.

இத்தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கு மத்தியிலும், குடியிருப்புகளுக்கு அருகிலும் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள கல் குவாரிகளில் தினசரி, வெடி வைத்து பாறை கற்கள் உடைத்தெடுக்கப்படுகின்றன.

அப்போது, குவாரியில் இருந்து வெளியேறும் புகை, அருகிலுள்ள சாலை பகுதி, குடியிருப்பு போன்ற இடங்களில் பரவுகிறது.

இதேபோல், கல் அரைவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும், ஏராளமான அளவில் புகை மூட்டமாக சூழ்ந்து, காற்று மாசு ஏற்படுகிறது.

உத்திரமேரூர் ஒன்றியத்தில் மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேரி, பினாயூர், சீத்தாவரம், பேரணக்காவூர், பொற்பந்தல், அமராவதிபட்டணம், குண்ணவாக்கம், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில், சில இடங்களில் கல் குவாரிகளும், பெரும்பாலான இடங்களில் கல் அரைவை தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன.

இத்தொழிற்சாலைகளில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், அக்கிராம சாலைகளை கடந்து அருங்குன்றம், பழவேரி மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்கின்றன.

இதனால், கனரக வாகனங்கள் இயங்கும் அக்கிராம சாலைகள் அடிக்கடி சேதமடைவதும், அவ்வப்போது சீர் செய்வதும் தொடர்கிறது.

சேதமான சாலைகளில் மண் புழுதி ஏற்படுவதோடு, அச்சாலைகளில் தார்ப்பாய் போர்த்தாமல் இயங்கும் லாரிகளில் இருந்து சிதறும் மண், எம்.சான்ட் மணல் போன்றவை, சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவுகின்றன.

இந்த புகை, சாலைகளில் இருந்து பரவும் மண்புழுதியால், கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள், மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.

புகை மற்றும் புழுதி கலந்த காற்றை சுவாசிப்பதால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, அருங்குன்றம் கிராமவாசிகள் கூறியதாவது:

அருங்குன்றம் அருகிலுள்ள கல் குவாரி மற்றும் சாலைகளையொட்டி, 'கிரஷர்'கள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, கிராம சாலை வழியாக இரவு, பகலாக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், அச்சம் ஏற்படுகிறது.

இதனால், வீடுகளில் புழுதி படிகிறது. பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, அதிகாரிகளிடத்தில் முறையிட்டும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில், சுற்றுசூழல் மாசு பிரச்னைகள் குறித்து, புகார் ஏதும் வரவில்லை.

மாசு பிரச்னை நிலவுவது குறித்தும், அவ்வாறான இடப்பகுதிகளை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ புகார் அளித்தால், அந்த இடங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆய்வில், காற்று மாசு அளவீட்டு கருவி வாயிலாக சோதனை செய்து, அதன் அடிப்படையில் காற்று மாசு குறைக்க, அரசின் பரிந்துரைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



* கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குதல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் முதற்கொண்டு, மேல்மட்ட அதிகாரிகள் வரை, அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது அபராதம், வாகனங்கள் பறிமுதல், உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

- மாவட்ட கனிமவள துறை அதிகாரி,

காஞ்சிபுரம்.

* நிபந்தனையுடன் அனுமதி

கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து வெளியேறும் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை நுரையீரல் சம்பந்தமான நோய் தாக்குதலுக்கு உள்ளாவர்.

கல் குவாரி மற்றும் கிரஷர் செயல்பட உரிமம் கோரி, சுகாதாரத் துறையிடம் விண்ணப்பிக்கும் போது, லோடு லாரிகளில் தார்ப்பாய் போர்த்தி இயக்க வேண்டும், சாலைகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி அனுமதி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கலெக்டர் பங்கேற்பு கூட்டங்களிலும், அவ்வாறே அறிவுறுத்தப்படுகிறது. இதை தொழிற்சாலை நிர்வாகத்தினர் பின்பற்றாதது குறித்து, மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- உத்திரமேரூர் வட்டார சுகாதார அலுவலர்.






      Dinamalar
      Follow us