/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கிளை சிறையில் சமூக பாதுகாப்பு துறை ஆய்வு
/
காஞ்சி கிளை சிறையில் சமூக பாதுகாப்பு துறை ஆய்வு
ADDED : மார் 20, 2024 12:13 AM

காஞ்சிபுரம்,:தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ன் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வழி காட்டுதலின்படி, சிறைகளில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் உள்ளனரா என, சமூக பாதுகாப்புத் துறை,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இத்துறையினர், காஞ்சிபுரம் கிளை சிறையில், சிறை கண்காணிப்பாளர் செந்துார்பாண்டி முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சக்தி காவியா தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா, மாவட்ட இளைஞர் நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூகப் பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் செல்வி, நன்னடத்தை அலுவலர் தயாளன் உள்ளிட்ட குழுவினர் உடனிருந்தனர். காஞ்சிபுரம் கிளை சிறையில், 47 சிறைவாசிகள் மட்டுமே இருந்தனர்.
இதில், 18 வயதிற்கு உட்பட்டோர் எவரும் இல்லை என ஆய்வு குழுவினரால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
சிறையில் தங்கியுள்ள சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கு பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி, உதவித்தொகை, மருத்துவ உதவி ஏதாவது தேவைப்படுகிறதா என குழுவினர் கேட்டறிந்தனர்.
அவ்வாறு உதவி தேவைப்பட்டால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அல்லது குழந்தைகள் உதவிக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் சிறைவாசிகளுக்கு குழந்தைகள் சம்பந்தமான நலன் கருதி, தேவை ஏற்பட்டால், சிறைவாசிகள் எழுத்துப்பூர்வமாக கிளை சிறை கண்காணிப்பாளர்  வாயிலாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கலாம் என குழுவினர் தெரிவித்தனர்.

