/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களுக்கு மென்பொருள் பயிற்சி
/
மாணவர்களுக்கு மென்பொருள் பயிற்சி
ADDED : பிப் 01, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணத்தில், ஜேப்பியார்தன்னாட்சி கல்லுாரி அமைந்துள்ளது.
கல்லுாரி நிர்வாகம் மற்றும் 'மிஸ்டர் கூப்பர்' மென்பொருள் நிறுவனம் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான கணினி பயிற்சி முகாம், கல்லுாரியில் நேற்று முன் தினம் நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட கணினி பெண் பொறியளர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வாழங்கப்பட்டது. இதன் வாயிலாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி மென்பொருள் துறையில் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.