/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உளுந்து சாகுபடியில் தேமல் நோயை கட்டுப்படுத்த கரைசல்
/
உளுந்து சாகுபடியில் தேமல் நோயை கட்டுப்படுத்த கரைசல்
உளுந்து சாகுபடியில் தேமல் நோயை கட்டுப்படுத்த கரைசல்
உளுந்து சாகுபடியில் தேமல் நோயை கட்டுப்படுத்த கரைசல்
ADDED : ஆக 06, 2025 02:08 AM

உ ளுந்து சாகுபடியில், தேமல் நோயை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
உளுந்து, பச்சை பயறு ஆகியவற்றில், தேமல் நோய் வரும். இந்த நோய், வெள்ளை ஈக்கள் மூலமாக பரவுகிறது.
இது, இளம் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகளில் துவங்கும். மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறி காணப்படும். இதனால், பயிர் வளர்ச்சி குறைவாகவும், குறைவான பூக்கள் பூத்து, காய் காய்க்கும். இதை தவிர்க்க, முறையாக விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
இமிடாகுளோபிரிட் என்ற பூச்சிக் கொல்லி மருந்துடன் 2 கிராம் போராக்ஸ், 10 சதவீதம் நொச்சி இலைச்சாறு, இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.
ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலி ஸ் என்ற பாக்டீரியா உயிர்கொல்லி மருந்து 1 கிலோவை, 10 கிலோதொழு உரத்துடன் கலந்து, கரைசலை மண்ணில் தெளிக்க வேண்டும். 1 ஏக்கருக்கு, ஐந்து எண்ணிக்கை மஞ்சள் ஒட்டுப்பொறி அமைக்கலாம்.
இமிடாகுளோபிரிட் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில், 15 மில்லி கலந்து கரைசலை வயலில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -முனைவர் செ.சுதாஷா,
97910 15355.