/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்துக்குடி பழங்களை தாக்கும் துரு பூச்சியை கட்டுப்படுத்த கரைசல்
/
சாத்துக்குடி பழங்களை தாக்கும் துரு பூச்சியை கட்டுப்படுத்த கரைசல்
சாத்துக்குடி பழங்களை தாக்கும் துரு பூச்சியை கட்டுப்படுத்த கரைசல்
சாத்துக்குடி பழங்களை தாக்கும் துரு பூச்சியை கட்டுப்படுத்த கரைசல்
ADDED : ஆக 13, 2025 01:48 AM

சா த்துக்குடி பழங்களை தாக்கும் துரு பூச்சியை கட்டுப் படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையத்தின், தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர், முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில், துரு பூச்சிகள் தாக்கம் ஏற்படும். இந்த பூச்சிகளின் தாக்கம் இலை, காய்கள், கனிகள், கிளைகளையும் தாக்கும்.
துவக்கத்தில், இலைகளில் சிறு, சிறு புள்ளிகளில் துவங்கி, பூச்சிகளாக மாறி, இலை, காய், பழங்களை தாக்கும். பயிர்களின் மக சூலைக் குறைத்து, தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.
இதனால், பழங்கள் செந்நிறத்தில் மாறும். சில நேரங்களில் ஊதா நிறத்திலும் மாறும். நிறமாற்றத்தால், பழச் சந்தைகளில், ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடிக்கு விலை குறைய வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்க, 1 லிட்டர்தண்ணீருக்கு 1 மில்லி குளோர்பைரிபாஸ் மருந்து விகிதத்தில் கலந்து, அந்த கரைசலை, இலை, காய், பழங்களில் படும்படி தெளிக்க வேண்டும். நீர் பாசனத்தை அதிகமாக்க வேண்டும். இதுபோன்ற முறைகளை கடைப்பிடித்தால், ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழங்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -முனைவர் செ.சுதாஷா,
97910 15355.