/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழவேரியில் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு
/
பழவேரியில் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு
ADDED : மே 10, 2024 12:46 AM
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இந்த கிராமத்திற்கு திருமுக்கூடல் மின் பகிர்மான வட்டம் மூலம், மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பழவேரி 10 ஊராட்சி பகுதியில், ஓராண்டாக தொடர்ந்து குறைந்த மின்அழுத்த பிரச்னை இருந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிராமலும், மின்விசிறிகள் வேகமற்று சுழல்வதாகவும்,வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதாகவும் இப்பகுதியினர் புலம்பி வந்தனர்.
குறைந்த மின் அழுத்த பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். அதன்படி, திருமுக்கூடல் மின் பகிர்மான மையம் சார்பில், 63 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி பழவேரியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கான முதற்கட்ட பணி நேற்று துவங்கியது.