/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்சென்னை கோ - கோ: 30 பள்ளி அணி பங்கேற்பு
/
தென்சென்னை கோ - கோ: 30 பள்ளி அணி பங்கேற்பு
ADDED : அக் 28, 2024 11:38 PM

சென்னை : அரசு பள்ளிக் கல்வித்துறையின் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், தென் சென்னை மாவட்டத்தின் கோ - கோ போட்டி, ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.
இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. நேற்று மாணவர்களுக்காக நடந்த முதல் நாள் போட்டியை, தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி துவங்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும், தலா 10 மண்டல அணிகள் என, மொத்தம் 30 அணிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் போட்டியில், விருகம்பாக்கம் மண்டலம் மற்றும் ஆலந்துார் மண்டல அணிகள் மோதின. அதில், 12 - 3 என்ற கணக்கில் விருகம்பாக்கம் மண்டலம் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், சோழிங்கநல்லுார் மண்டலம், 7 - 1 என்ற கணக்கில் தேனாம்பேட்டை மண்டல அணியை தோற்கடித்தது. கோடம்பாக்கம் மண்டல அணி, 11 - 10 என்ற கணக்கில் அடையார் மண்டல அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்று, மாணவியருக்கான போட்டிகள் நடக்கிறது.