/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
/
உத்திரமேரூரில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 24, 2025 07:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடந்தது.
உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை, பழங்குடியினர் தடையின்றி பெறுவதற்கான, பழங்குடியினருக்கான தொல்குடி திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தாசில்தார் தேன்மொழி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
அதில், பழங்குடியின மக்களிடமிருந்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆறு மனுக்கள் பெறப்பட்டன.