/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
மே 1ல் 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஏப் 24, 2025 01:13 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
மேற்கண்ட ஊராட்சிகளில், சுதந்திர தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர்கள் தினம் ஆகிய பல்வேறு தினங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.
மே- 1ம் தேதி, தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், வரவு - செலவு கணக்கு பதாகை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.